Saturday, 8 October 2016

சிவ வாக்கியம்

சித்தர் சிவவாக்கியர்

FRIDAY, MAY 10, 2013

சிவவாக்கியம் (001–010)

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!! 
சித்தர் சிவ வாக்கியர்.




*****************************************************

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் 001 - காப்பு :-

அரியதோர் நம சிவாயம் ஆதியந்தம் ஆனதும் 

ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம்

கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவ வாக்கியம் 

தோஷ தோஷ பாவ மாயை தூர தூர ஓடவே.

மிகவும் அரியதான நவசிவய என்ற அஞ்செழுத்தே ஆதியும் அந்தமும் ஆகி உள்ளது. எண்சான் உடம்பைப் பெற்ற அறிய பிறவியை அடைந்த மனிதர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அன்றும் இன்றும் ஓதி வருவதும் அனைவருக்கும் எடுத்துரைத்த மந்திரம் 'ஓம் நமசிவயஎன்பதே. அதுவே அனைத்தும் அடங்கிய ஒரெழுத்தானதையும் என் உயிரில் வாலையாக  விளங்குவதையும் உணர்ந்து அந்த ஓரெழுத்தை தியானித்து அதன் உள்ளிருக்கும் சிவனை அறிந்து இதனை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே ஈசனை தியானித்து இந்த சிவ வாக்கியம் என்ற நூலைச் சொல்லுகின்றேன். இதனைப் படித்து உணர்பவர்களுக்கு எல்லா தோஷங்களும்பற்றிய பாவ வினைகளும்தொடரும் மாயைகள் யாவும் விலகி தானே வெகு தூரம் ஓடிவிடும்.

*****************************************************

சித்தர் சிவ வாக்கியரின் சிந்தனைகள் 002

கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்

கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே

பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்

பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.

"கரியதோர் முகத்தையுற்ற கற்பகம்" இது உபதேசத்தினால் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள். இந்த ஒரு பொருளை உலகோர் உணர்வதற்கே இந்த சிவவாக்கியம் முழுவதும் சொல்லி இருக்கின்றார் சிவவாக்கியர். கரிய நிறமுடைய தும்பிக்கையை முகத்தில் உடையவரும் கேட்ட வரங்கள யாவையும் கற்பகத்தருவை போல் வழங்கும் கருணை உடையவரான கணபதியை கைகள் தொழுது வேண்டுகின்றேன். ஆய கலைகள் அறுபத்தி நான்கும்வேத ஆகம புராண சாஸ்திர நூல்களில் உள்ள உண்மைகளும்முக்கண் ஞான அறிவும் என் கருத்தில் தோன்றி இந்நூலில் உதிக்க வேண்டும். அறிஞர் பெருமக்களும்வயதில் சிறியவராயினும் ஞானம் பெற்றவர்களும்யோக ஞானம் அனைத்தையும் கற்று உணர்ந்தவர்களும் மற்றும் யாவரும் பேயனாகிய யான் சொல்லுகின்ற சிவ வாக்கியத்தில் உள்ள தவறுகளை பொறுத்து அருள வேண்டும்.

*****************************************************

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் 003

ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்

ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்

ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்

ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

 நமசிவய என்ற அஞ்செழுத்துக்குள்ளே அண்டமாகிய இவ்வுலகமும் அகண்டமாகிய  ஆகாய வெளியும் அமைந்துள்ளது. ஆதி பராசக்தியினால் ஆன அஞ்செழுத்தே ஆதியாகிஅதிலேயே பிரம்மா,விஷ்ணுசிவன் என்ற மும்மூர்த்திகளும் அமர்ந்திருக்கின்றனர். அந்த அஞ்செழுத்தின் உள்ளேயே அகாரமாகவும் மகாரமாகவும்அறிவும் மனமும்ஒளியும் இருளும்இறையும் மாயையுமாய் அமைந்துள்ளது. ஆதலின் இந்த அஞ்செழுத்தை அறிந்துணர்ந்து ஓதுங்கள். இந்த அஞ்செழுத்துக்குள் தான்  அனைத்து தத்துவங்களும் அடங்கி அது நமக்குள்ளேயே பஞ்சாட்சரமாகி உற்ற பொருளாய் உட்கலந்து இருக்கின்றது.

*****************************************************

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் :-004

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை

நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்

வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்

கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாதுஅவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதைமாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோதம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே.

*****************************************************

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்  005

"உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்

கத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீறேல்

விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்

அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே".

நம் உடம்பில் கழுமுனை நாடியில் மூலாதாரத்தில் தனஞ்செயன் எனும் பத்தாவது வாய்வு ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றது. இதையே யோகிகள் குண்டலினி சக்தி என்பர். தாயின்  கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் பொது தனஞ்செயன் என்ற இக்காற்றின் செயலால் தான் பிண்டம் பிறக்கின்றது. . அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலாதாரத்திலேயே ஒடுங்கி உள்ளது. உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். .ஆதலால் இதனை நன்குஅறிந்து வாசியோகம் எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி அதனை எழுப்பி சுழுமுனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும். .இதனை முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தொடர்ச்சியாக தியானத்தில் இருந்து வருபவர்கள் கிழவனாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர். அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும். இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம். . நம் உடம்பிலேயே சிவசக்தி திருவடியான் பாதம் மெய்ப்பொருள் என்பதுவே உண்மை

*****************************************************

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்-006 

வடிவு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்

விடுவனோ அவனை முன்னர் வெட்டவேண்டும் என்பனே

நடுவண் வந்து அழைத்த பொது நாறும் இந்த நல்லுடல்

சுடலை மட்டும் கொண்டு போய்த் தொட்டி கைக் கொடுப்பரே".

அழகிய பெண்ணைக் கண்டு மணமுடித்துக் கொண்டவன் அப்பெண்ணை வேறு ஒருவன் தொட்டு விட்டால்விடாதே அவனைப் பிடித்துக் கட்டுங்கள் .  முதலில் அவனை வெட்டவேண்டும் என்று அரிவாளை எடுப்பான். . அந்த அழகிய பெண்ணை விதிவசத்தால் எமன் வந்து உயிரை எடுத்துப் போய்விட்டால் என்ன செய்வாய். . மிக அழகிய பெண்ணாயிற்றே என்று அந்தப் பிணத்தை அப்படியே வைத்திருக்க முடியுமாஅவ்வுடம்பில் பிணவாடை வீசி நாற்றமடிக்குமல்லவா . ஆகவே அதனை அந்த

அழகிய உடம்பைசுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தோட்டியின் கையில் கொடுத்து

அவன்அந்த தோட்டிஅவ்வுடலை தொட்டுத் தூக்கி எரிக்கவோபுதைக்கவோ சொல்லுவார்கள். .அப்போது மட்டும் அந்த தொட்டியின் மீது கோபம் வருவதில்லையேஅது ஏன் என்று யோசியுங்கள். . அந்த அழகின் மீதிருந்த மோகமோ அன்போ எங்கே போயிற்று என சிந்தியுங்கள். . அப்போது புரியும் அழியும் பொருள்களின் மீதுள்ள ஆசை நிலைப்பதில்லை என்று.

*****************************************************

சித்தர் சிவ வாக்கியரின் சிந்தனைகள்-007

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது கொண்ட பின்

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது காண வல்லரோ

என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே”.

எனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் முன்பு அறிந்து கொள்ளவில்லை. அப்பரம்பொருளை பல இடங்களில் தேடியும்நல்ல நூல்களைப் படித்தும்நல்லோரிடம் பழகியும்நல்ல குருநாதர் மூலம் அது என்னிடமே இருப்பதை யான் அறிந்து கொண்டேன். . தனக்குள் இருந்த உயிரை அறிந்து அதனுள் இருக்கும் ஈசனை யார் காண வல்லவர்கள். . என்னிலே இருந்த அந்த மெய்ப்பொருளை அறிந்து அதையே என் உள்ளத்தில் இருத்தி தியானத்தில் இருந்துஇருந்து அந்த உண்மையை யான் உணர்ந்து கொண்டேன்.

*****************************************************

சித்தர் சிவ வாக்கியரின் சிந்தனைகள்-008

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை

நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ

அனைத்துமாய் அகண்டமாய் அநாதி முன் அனாதியாய்

எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்கு மாற தெங்கனே

நான் தியானத்திலிருந்து நினைப்பது ஒன்றான மெய்ப் பொருளேஅது நீயேயன்றி வேறு ஒன்றையும் நான் கண்டது இல்லை. நான் தியானத்தில் அமர்ந்து நான் என் நினைவை புருவ மத்தியில் நிறுத்தி பார்க்கும்போது அங்கு உன் நினைவைத் தவிர வேறு நினைவு இல்லை. நான் நினைப்பதாகவும்,மறப்பதாகவும்நின்ற மனம் ஒரு மாயையோ,இவ்வுலகில் உள்ள அனைத்துமாகவும் எல்லாம் அடங்கியுள்ள ஆகாயமாகவும் அநாதி காலங்களுக்கும் முன் உள்ள அனாதியாகவும் உள்ளவன் நீயே. எனக்குள் நீ இருப்பதுவும் உனக்குள் நான் இருந்ததையும் உணர்ந்த பிறகு எல்லாம் உன்செயல் என்று அறிந்த பிறகு உன்னை நினைப்பது எவ்விதம் என் ஈசனேஉன்னை மறந்தால் தானே நினைக்க முடியும். உன்னை மறவேன் நானே!!!!

*****************************************************

சித்தர் சிவ வாக்கியரின் சிந்தனைகள்-009

மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ

எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ

கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ

நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் “.

பூமியாகவும்ஆகாயமாகவும்ஏழு கடல் நீராகவும்,காற்று நெருப்பு என பஞ்ச பூதங்களாக இருப்பவனும் நீயே. எட்டிரண்டு என்ற எண்ணாகவும்அகார உகார எழுத்தாகவும் ஆகி இசையுடன் கூடிய தேவாரப் பண்ணாகவும்ஏழு ஸ்வரங்களான சரிகமபதநி என்ற ராக எழுத்தாகவும் உள்ளவன் நீயே. கண்ணாகவும்,கண்மணி யாகவும்கண்ணுள் ஆடும் பாப்பாவாகவும் ஆனவனும் நீயே. . இப்படி அனைத்துமாய் உள்ள உண்மையான பிரம்மா ஞானத்தை எனக்கு வழங்கி என்னுள் நீராகி நின்ற நினது திருவடி பாதத்தை என்றும் என் தியானத்தில் வைக்க அருள்செய் ஈசா!

*****************************************************

சித்தர் சிவ வாக்கியரின் சிந்தனைகள்-010

அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்

கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம்

பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்

துரியமும் கடந்து நின்ற தூர தூர தூரமே

மெய்ப் பொருள் விஷ்ணுவுமல்லபிரம்மாவும் அல்ல. விஷ்ணுவாலும்பிரம்மாவாலும்

அடி முடி காண முடியாமல் அப்பாலுக்கப்பாலாய் நின்றவன் ஈசன். அவன் அதுவாகி அப்புறத்தில் அப்புறமாய் கருமை செம்மை வெண்மை நிறங்களைக் கடந்து நின்ற சோதியாகி காரணப் பொருளாய் நமக்குள்ளேயே இருக்கிறான். அச்சிவனே சீவனாக கருமையிலும் சிகப்பு வெள்ளை அணுக்களிலும் கலந்து நின்று உயிரும் உடலும் இயங்க காரணமாக இருக்கின்றான்.  அவனுடைய திருவடி நமக்குள் இருப்பதைஉணருங்கள். . அது பெரியதும் இல்லைசிறியதும் இல்லையாவிலும் நடுவாய் இருப்பது. அப்பாதத்தையே பற்றி நின்று தியானியுங்கள். அது துரியமாகிய ஆஞ்ஞா கமலத்தில் ஆகாயத் தத்துவத்தையும் கடந்து நிற்பதால் வெகு தூரமாய் தோன்றுகின்றது. இதனை தனக்குள்ளேயே அறிவை அறிந்து உண்மையை என்று உணர்ந்து தியானியுங்கள்.

*****************************************************


மேலும் பயணிப்போம் இனிய நட்புக்களே! சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளைக் அவரின் 550 பாடல்கள் மற்றும் விளக்கங்களுடனும் காண வேண்டி.

http://sivavakiyar.blogspot.com  நண்பர்களே! இணைப்பினை சொடுக்கி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை மேற்கண்ட வலைப்பூவில் இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்!!! மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  இந்நாள் இனிய பொன் நாளாக மலர வாழ்த்துக்கள்...அன்புடன் கே எம் தர்மா..

KRISHNAMOORTHY A.N.D. at 7:13 AM

Share

 

Home

View web version

ABOUT ME

KRISHNAMOORTHY A.N.D. 

View my complete profile

Powered by Blogger.

Saturday, 28 May 2016

கருப்பு செவ்வாய்

என்ன நடந்தது?

1929-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி அமெரிக்க பங்குச்சந்தை 13 சதவீதம் வரை சரிந்தது. அந்த திங்கள்கிழமை கருப்பு திங்கள் என்றே அழைக்கப்பட்டது. அடுத்த நாளும் கடுமையாக சரியவே அந்த நாளையும் கருப்பு செவ்வாய் என்றே வரலாற்றில் குறிப்பிட்டுள்ளனர். 1929-ம் ஆண்டின் உச்சத்தை விட 1932-ம் ஆண்டு 89 சதவீதத்துக்கும் மேலாக பங்குச்சந்தை சரிந்தது. பங்குச்சந்தை சரிவு என்பது பொருளாதார மந்த நிலையின் ஒரு பாதிப்பே தவிர மந்த நிலையின் ஆரம்பம் அல்ல.

சரிவின் காரணம்?

1929-க்கு முன்பே பொருளாதார மந்த நிலை தொடங்கி விட்டது. 1920களில் அமெரிக்காவில் நுகர்வு கலாசாரம் உருவானது. இந்த நுகர்வு கலாசாரம் அமெரிக்க தொழில்துறைக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம் ஆனால் பொருளாதாரத்துக்கு பாதகமாக அமைந்தது. பெரும்பாலான நுகர்வுகள் கடனில் இருந்தன. இதனால் பொருளாதார வளர்ச்சியில் நிச்சயமற்ற தன்மை உருவானது.

இதற்கிடையே அமெரிக்காவில் விவசாய பொருட்களின் விலையும் குறைந்துகொண்டே வந்தது. முதலாவது காரணம் உற்பத்தி அதிகரிப்பு. உலகப்போர் சமயத்தில் வீரர்களுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்வதற்கு விவசாயத்துறை விரிவடைந்தது.

மேலும் இந்த விரிவாக்க நடவடிக்கைகள் இயந்திரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் உற்பத்தி அதிகமானது. பொருட்களின் விலை குறைந்தது. கடனில் இயந்திரங்கள் வாங்கப்பட்டதால், விவசாயிகளுக்கு சுமை அதிகரித்தது. இதனால் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை கைவிட்டனர்.

இதுதவிர, 1920-ம் ஆண்டுகளில்தான் கார் உற்பத்தி தொடங்கியது. அந்த வகையிலும் நுகர்வு அதிகரித்து வளர்ச்சி உருவானது. 1925 களில் கார் விற்பனையில் மந்த நிலை உருவானது. மேலும் கட்டுமானத்துறையிலும் மந்த நிலை உருவானது.

1927-ம் ஆண்டுகளில் பங்குச்சந்தையில் ஊக வணிகம் அதிகரித்தது. பங்குச்சந்தையில் ஊக வணிகம் அதிகரித்த அதே சூழலில் அமெரிக்க மக்களும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். கிட்டத் தட்ட 40 லட்சம் அமெரிக்கர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள். அதுவும் கடன் வாங்கி...

பங்குச்சந்தை முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கு கடன் கொடுக்கும் சூழ்நிலையில் அமெரிக்க வங்கிகள் இல்லை. பங்குச்சந்தை விதிமுறைகள் சரியாக வகுக்கப்படாததால் ஊக வர்த்தகம் அதிகம் நடந்தது. இதற் கிடையே நிறுவனங்களின் லாப நஷ்ட கணக்குகளுக்கும் அவற்றின் பங்கு விலைகளுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தன. அக்டோபர் 23-ம் தேதி ஜெனரல் மோட்டார்ஸ் பங்கு சரிவை சந்தித்தது. வீழ்ச்சி ஆரம்பம் ஆனது. 1929-ல் இருந்த உச்சத்தை மீண்டும் தொடுவதற்கு அமெரிக்க பங்குச்சந்தைக்கு 27 வருடங்கள் தேவைப்பட்டது.

விளைவுகள் என்ன?

பங்குச்சந்தை சரிந்ததால், பணக்காரர் களுக்கு பணம் மட்டுமே இழப்பு, ஆனால் தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக இருந்தது. கிட்டத்தட்ட 1.5 கோடி மக்கள் வேலை இல்லாமல் தவித்தார்கள்.

தவிர வங்கிகளுக்கு கடுமையான விதிமுறைகள் இல்லாததால் வங்கிகள் முதலீட்டாளர்களின் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தன.

பங்குச்சந்தையும் சரிந்ததால் முதலீட் டாளர்களுக்கு பணத்தைத் திருப்பி கொடுக்க முடியவில்லை. அவர்களின் பணத்தை இன்ஷூரன்ஸ் செய்யவில்லை. (1934-ம் ஆண்டுதான் வங்கி டெபாசிட்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது). இதனால் வங்கிகள் தங்களது மற்ற சொத்துகளை விற்று பணம் கொடுக்க ஆரம்பித்தன. இதனால் ரியல் எஸ்டேட் சரிந்தது. 80 சதவீதத்துக்கும் மேலான கட்டுமான திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

இதனால் பல வங்கிகள் மூடப் பட்டன. இந்த செய்தி பரவி ஒரளவு செயல்பட்டுக் கொண்டிருக்கும் வங்கி களில் முதலீட்டாளர்கள் பணம் எடுக்க முற்பட்டதால், பல வங்கிகள் திவால் ஆனது. 1929க்கு முன்பு இருந்த வங்கி களில் பாதிக்கும் மேற்பட்ட வங்கிகள் 1933-ம் ஆண்டு காணாமல் போயின.

குறைவான பணம் மட்டுமே புழக்கத்தில் இயங்கி வந்தது. இதனால் பணவாட்ட சூழ்நிலை உருவானது. அமெரிக்க பொருளாதாரம் சரிய சரிய, அதன் தொடர்ச்சியாக மற்ற உலக நாடுகளும் சிக்கலில் தவித்தன. அப்போது இருந்து பிக்ஸட் கரன்ஸி முறையும் அதற்கு ஒரு காரணம் ஆகும். முதல் உலகப்போர் சிக்கலில் இருந்த பல ஐரோப்பிய நாடுகளுக்கு, இந்த பொருளாதார மந்த நிலை மேலும் நெருக்கடியைக் கொடுத்தது. பல ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு உதவி செய்துகொண்டிருந்தது. அங்கேயே பிரச்சினை வந்ததால் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கடன் குறைந்தது. குறிப்பாக இங்கிலாந்தும், ஜெர்மனியும் மிகவும் பாதிக்கப்பட்டன. ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக இருந்தது.

மீண்டும் சகஜ நிலை?

இந்த மந்த நிலைமை அமெரிக்க அரசியலையும் மாற்றியது. 1929 முதல் 1933-ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் ஹெர்பர்ட் ஹோவர். மந்த நிலை இருந்தாலும், அதனைச் சரியாக கணிக்கத் தவறியவராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க மக்களின் மனநிலையை குறை சொல்லியபடியும், பெடரல் அரசு எந்தவிதமான உதவியும் செய்ய முடியாது என்றும் மறுத்துவிட்டார்.

இதனால் 1932-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹோவர் தோற்கடிக்கப்பட்டு ரூஸ்வெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு பொருளாதாரத்தை மீட்பதற்கு கடுமையாக நடவடிக்கைகள் எடுத்தார். நான்கு நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை கொடுத்து, வங்கிகளை மீட்கும் நடவடிக்கைகளை எடுத்தார். அதன் பிறகு வங்கி சட்டம் இயற்றப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு திவாலான வங்கிகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. நிலையை சீராக்குவதாக நேரடியாக மக்களிடம் பேசி நம்பிக்கையை உயர்த்தினார்.

இவர் காலத்தில்தான் வங்கி டெபாசிட்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்யும் முறையையும், பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தை (எஸ்இசி) அமைத்தார்.

அரசாங்க முதலீடுகளை அதிகரித்தார். மெல்ல மெல்ல வேலை இல்லாத சூழ்நிலையை குறைத்தார். ஆனாலும் 1930களின் இறுதியில் வேலையில்லாத சூழ்நிலை அதிகமாகவே இருந்தது. 1939-ம் வரை 17 சதவீதம் வரையிலும், 1941-ல் 14 சதவீதமாகவும் வேலை இல்லாதவர்களின் விகிதம் இருந்தது. அதாவது அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் களம் இறங்கும் வரையில் மந்த நிலை தொடர்ந்தது. அதன் பிறகுதான் தேவை அதிகரித்தது.

ரகுராம் ராஜன் இது போன்ற சூழல் மீண்டும் நிகழலாம் என்று கணித்து சொல்லியிருந்து, பிறகு மக்களை பதற்றத்துக்குள்ளாக்க வேண்டாம் என்பதற்காக, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என மறுத்திருக்கலாம் என்ற யூகங்களும் எழுகின்றன.

எது எப்படியோ வரலாறு மீண்டும் திரும்பாமல் இருந்தால் நல்லது.


Wednesday, 6 April 2016

வல்லளார்

மெய்ப்பொருள் பாடல்கள்

எல்லா மதங்களும், சமயங்களும் வெவேறு கொள்கைகள் வைத்திருந்தாலும்…… சேருமிடம் இறைவனைத்தான் என்று பொதுவாக சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம். இது உண்மையா?
நிச்சயமாக இல்லை…. நீங்கள் எந்த கொள்கை வைத்து இருக்கிறீர்களோ அந்த கொள்கைக்கு என்ன கிடைக்குமோ!! அதுதான் கிடைக்குமே தவிர நாம் இறைவனை அடைய முடியாது .
இறைவன் ஏக இறைவனாக இருந்தால் அவனை அடையும் வழியும் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர நிச்சயமாக வேவேராக இருக்க முடியாது….
அதற்குதான் …. நாம் பார்க்க வேண்டியது … ஞானிகளின் பாடல்களையும் அவர்களின் கருத்துக்களையும் தானே தவிர…. சமயத்தையோ, ஆசிரம்த்தையோ அல்ல…. அப்படி சமயத்தின் படியோ (or) ஆசிரமத்தின் படியோ நடந்தால் நீங்கள் மிஞ்சி போனால் சமய தலைவனாகவோ அல்லது ஆசிரம தலைவனாகவோ ஆக முடியமே தவிர ஒரு காலும் பிரபஞ்சத்தின் அதி உன்னதமான நிலையை அடைய முடியாது……….
இதை திருஅருட்பிரகாச வள்ளலார் நன்கு உணர்ந்ததால் தான் இப்படி சொன்னார்…………
“இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தைன் தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல்வேண்டும்”
இப்பொழுது நாங்கள் கொடுக்க போகும் மெய் பொருள் விளக்க பாடல்களை நாம் ஒரு சமயத்திலோ அல்லது ஆசிரம்திலோ 50 வருடம் குப்பை கூட்டினால் கூட கிடைக்குமா என்பது சந்தேகமே……………. அந்த அளவிற்கு இது ரகசியமாக வைக்க படுகிறது … அதை பட்ட வர்த்தனமாக இங்கு நாங்கள் வெளிபடுத்துகிறோம்.
வள்ளல் பெருமானின் திருவடி வணங்கி இதை பதிகிறேன்….. உண்மையான ஆன்ம தாகம் உள்ளவர்களை இந்த பதிவு போய் சேர அருட்பெரும் ஜோதி ஆண்டவரை வேண்டி கொள்கிறேன்.
பட்டினத்தார் பாடல்:
“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்
கெட்டாத புட்பமிறையாத தீர்த்தமினி முடிந்து
கட்டாத லிங்கங் கருதாத நெஞ்சங் கருத்தினுள்ளே
முட்டாத பூசை யன்றோ குருநாதன் மொழிந்ததுவே.”
வெட்டாத சக்கரம் – நமது கண்மணி எப்படி உள்ளது.. அதாவது கருவிழி.. வட்டமாக சக்கரமாக உள்ளதா… அது வெட்டி வட்டமாக்கபட்ட சக்கரம் அல்ல என்கிறார்.
பேசாத மந்திரம் – பேசினால்தானே மந்திரம், பேசாவிட்டால் மௌனம். கண் பேசாது அதான் மௌனம்.
வேறொருவர்க் கெட்டாத புட்ப – வேறொருவருக்கு எட்டாத புட்பம் நம் கண்மலர் எப்படி எனில்… யாரவது உங்கள் கண் அருகில் கையை கொண்டு வந்தால் இமைகள் மூடி கொள்ளும் இதனைத்தான் வேறொருவருக்கு எட்டாத புட்பம் என்று பாடினார்……
மிறையாத தீர்த்த – நம் கண்ணிலே உள்ள நீர் இறைக்கபடாமல் உள்ளதா….ஆம் இறைவனை நினைக்க நினைக்க நீர் கங்கை போல் பெருகி ஒடுமஅல்லவோ…
இந்த இடத்தில் நீங்கள் எமது நாயகன் வள்ளல் பெருமானின் பாடலை நினைவு படுத்தி கொள்ளவும்……
“நினைந்து நினைந்து
உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து
ஊற்றெழும் கண்ணீர் அதனால்
உடம்பு நனைந்து நனைந்து
அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே
என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்ததும்
நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்
கண்டீர் புனைந்துரையோன் பொய்புகலேன்
சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே”
புரிகறதா எல்லாம் கண்தான் என்று………….
யன்றோ குருநாதன் மொழிந்ததுவே – இவைகளையே என் குருநாதன் மொழிந்தது என்று கூறுகிறார்……
இனிமேலாவது நாம் யாரை குரு என்று கொள்ள வேண்டும் என்று புரிகறதா….. இதை சொல்லி உணர்த்தி காடுபவர்தான் குரு…. அதை விட்டு விட்டு எல்லா அசிரமங்களிலயும் சொல்லி கொடுக்கப்படும் மூச்சு பயறிசி, காலை நீட்டி மடக்கி செயும் யோகா போன்றவற்றை சொல்லி தருபவர்களி எல்லாம் ஞான சர் குரு என்று நாம் கொள்ள கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் பட்டினத்தடிகளின் மிக அழகான பாடல்……….

“கண்டம் கரியதாம் கண்மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல அழகியதாம் – தொண்டர்
உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு.”
“கண்டம் கரியதாம்” – கண்டம் கருப்பு நிறமுடையது – கருவிழி.
“கண் மூன்று உடையதாம்” – அது எப்படி???
ஆம் ஐயா… கண்ணில் முதலில்
1. வெள்ளை படலம் உள்ளதா???
2. அதனுள் ஒரு கருபடல்ம் உள்ளதா??
3. அதனுள் இறுதியாக ஒரு சிறிய கரு விழி உள்ளதா??
இதுதான் மூன்று கண் என்பது!!!!
“கடலருகே நிற்கும் கரும்பு” என்று பாடுகிறார்….
கரும்பு எங்காவது கடலில் விளையுமா…தோழர்களே….. சிந்தியுங்கள் …. அப்புறம் எப்படி “…….கரும்பு” என்று பாடினார்.
கடல் நீர் எப்படி இருக்கும்??
கரிக்குமா???? உங்கள் கண்ணீர் எப்படி இருக்கும்?????? சொல்லுங்கள் அதுவும் கரிக்குமா!!!!!
அந்த கடல் போன்ற இடத்தில் நிற்கும் கரும்பாம்????
இதை நாம் கரும்பு என்று படிக்க கூடாது?? கருப்பு + பூ ???
ஆம் இருக்கிறது அது நம் கண் மலர்தான் அதுதான் நம் கண்ணீர் என்ற கடலில் ஒற்றி நிற்கும் கரும்பு என்று பாடினார்.
திருமூலர் பாடல்:
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணென்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுறுக்கயொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக்களிம் பறுத்தானே –  113
இறைவன் ஆகாயத்திலிருந்து இறங்கி நம் வினைக்கு ஏற்ப உடல் எடுத்து குளிர்ச்சி பொருந்திய திருவடியை தலைக்கு முன் பக்கத்திலே காட்டி – உள் நின்று உருக்கி ஒப்பிலாத ஆனந்தத்தை கண்ணிலே காட்டி – களிம்பாகிய
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னை
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வௌகைண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே – 600
நயனம் என்றால் கண் ஐயா….கண்களில் உள்ள ஒளியை பார்த்து சாதனை செய்ய செய்ய.. விண்ணிலிருந்து ஒளி தோன்றி நம் முன் காரியபடுவதை காணலாம் … என்கிறார்
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே – 1871
எல்லாமே கண்தான். இதை தவிர ஒன்றும் இல்லை என்கிறார்
காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்
பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே – Song_2823
காணவல்லவர்கள் ஆர்வத்தோடு முயல்பவர்கள் கண்மணியாம் இறைவனை காணுங்கள் என்கிறார்
இறுதியாக…. இந்த பாடலை பாருங்கள்…
….
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே – Song_603
எண்ணாயிரம் ஆண்டுகள் யோகம் செய்தாலும் அறிய முடியாது. கண்ணில் கலந்து நின்ற அவனை நாடி உள்ளே ஒளிபெற நோக்க காணலாம் அவனை என கூறுகிறார்.
மும்மலங்களை அறுத்தான் என்கிறார்
இதற்க்கு மேலும் சில திரு மூலரின் ஞானத்தை தெளிக்க முடியும் ஆனால் இப்போதைக்கு இது போது என்று நினைக்கிறேன்.
மாணிக்கவாசகர் பாடல்:
பாடலை பார்ப்பதற்கு முன் மாணிக்கவாசகரை பற்றி எம் வள்ளல் பெருமானின் பாடலை பாருங்கள்……….
“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை,
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”
இது போதாதா…….அவர் புகழ் சொல்ல…. எங்காவது கேள்வி பட்டதுண்டா…. ஒரு சுத்த மெய் ஞானி…. இன்னொரு சுத்த மெய் ஞானியை பற்றி பாடியதுண்டா?????
வன்திருபெருந்துறையாம் வழியடியோம் கண்ணகத்தே
நின்று களிதரும் தேனே- திருபள்ளிஎழுச்சி பாடல்-9
திருபெருந்துறையாம் – திருவாகிய இறைவன் தங்கியிருக்கும் பெரும் துறை .
பெரிய துறை – இடம் என்று பொருள்படும்
இது நம் உடலில் அடியார்களாகிய எங்கள் கண்ணில் அகத்தே – உள்ளே நின்று ஆனந்தம் தருபவனே என இறைவன் நம் கண்ணினுளே நின்றதை தெளிவு படுதியுருகிறார்
“அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே”
ஒப்பில்லாத நம் கண் – மணியே அம்மையப்பன் என்று சொல்கிறார்
மாணிக்கவாசகரும் ஒளியுடல் பெற்றவர்தான்.
தாயுமானவர் பாடல்:

“காணும் கண்ணில் கலந்த கண்ணே”
நாம் காணுகின்ற நம் உடலில் உள்ள கண்ணில் கலந்த இறைவனே என்கிறார்…………….
“கண்ணுள் நின்ற ஒளியை கருத்தினை
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நாணுகின்றவர் நான்தொழும் தெய்வமே”
கண்ணுள் நின்ற ஒளியை – கருவிழிக்குள் விண்ணாகிய ஆகாயத்தில் அந்தரத்தில் நின்று விளங்கும் மெய்யான – ஒளியை கருத்திலே இருத்தி இரவு பகல் பாராது எந்நேரமும் எண்ணி எண்ணி சாதனை புரிபவர்களே நான் தொழும் தெய்வம் என்று தாயுமான சுவாமிகள் கூறுகிறார்.

http://tamil.vallalyaar.com/?p=2582