புதுடெல்லி,
2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது இந்தியாவில் புரட்சி துவங்கியதற்கான அடையாளமாகவே கருதுவதாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் அசோக் சிங்கால் பேசியவை பின்வருமாறு:-
நான் சாய்பாபா ஆசிரமத்தில் இருந்திருக்கிறேன். சாய்பாபா என்னிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். வரும் 2020-ம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதுமாக இந்துக்களின் நாடாகிவிடும். 2030-க்குள் உலகம் முழுவதும் இந்துக்களின் பிரதேசமாக மாறிவிடும். அதற்கான புரட்சி ஏற்கனவே துவங்கிவிட்டது. நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் வந்ததற்கு பிறகு இந்தியாவின் 800 ஆண்டுகள் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இது சாதாரண புரட்சியல்ல. இந்தியாவை ஒரு வட்டத்திற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் புரட்சி அல்ல இது. உலகத்திற்கே புதிய தத்துவங்களையும், வாழ்க்கை முறையையும் அறிமுகப்படுத்தும் புரட்சி.
இவ்வாறு அசோக் சிங்கால் பேசினார்.
No comments:
Post a Comment