ஸ்ரீபளுவத்தி அம்மன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மலையில் பிறந்தவள் பின்பு ஆற்று நீரில் எலுமிச்சை கனியில் வந்து நெல்லை மக்களின் காவல்தெய்வமாக இருந்து காத்து வருகிறாள்
கிருஷ்ணாபுரம்-நொச்சிகுளம், முன்னீர்பள்ளம், குறிச்சி, பாளை அரியகுளம் விலக்கு, ஆவரைகுளம், நாட்டார்குளம் ஆகியன முக்கிய தலங்கள் ஆகும்,
இராம்பிரானை சகோதரனாகவும், திருசெந்தூர் முருகபெருமானை மகனாகவும் கொண்டவள்
அக்கிரமங்களை அழிக்கவும் தப்பு செய்தவர்களை தண்டிக்கவும் தனது மகளான பால் இசக்கியம்மனை தனது எதிரில் வைத்து இருக்கிறாள் அன்னை
எப்போதும் எளிமையை மட்டுமே விரும்பும் அன்னை தனக்கு பச்சை பனை ஓலையால் மட்டுமே குடில் அமைக்க விருப்பம் உடையவள். தனது பக்தர் களுக்கு என்றும் துணையாக இருப்பவள் குழந்தை வரம் வேண்டுவோருக்கு வேண்டிய வரம் உடனே அளிப்பவள்
இன்னும் பல அதிசயங்கள் நிறைந்த ஸ்ரீபளுவத்தி அம்மனை வணங்கி பல நன்மைகள் பெறுவோம்....
No comments:
Post a Comment