Sunday, 9 August 2015

ஊழல் பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்

இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினை. அது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கின்றது. இந்தியாவில் திரான்சிபரன்சி இன்டர்நேஷனல்(Transparency International) நடத்திய 2005ஆம் ஆண்டின் ஆய்வின் படி 62 சதவிகிதத்திற்க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது, அல்லது செல்வாக்கு பயன்படுத்தி பொது அலுவலகங்களில் வெற்றிகரமாக வேலைகளை முடித்துக் கொள்வதில் முதல் கை அனுபவம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதன் 2008 ஆய்வில், 40% இந்தியர்கள் இலஞ்சம் கொடுப்பது அல்லது ஒரு தொடர்பை பயன்படுத்தி பொது அலுவலகத்தில் வேலையை செய்து முடிப்பதில் முதல் கை அனுபவம் பெற்றுள்ளனர், என குறிப்பிடப்பட்டுள்ளது.

2011 ல் இந்தியா திரான்சிபரன்சி இன்டர்நேஷனலின் ஊழல் மலிவுச் சுட்டெண்ணில் (Corruption Perceptions Index) 178 நாடுகளுள் 95 வது இடத்தில் இந்தியா இருந்தது.

இந்திய அரசாங்கம் இயற்றிய சில சமூக செலவு திட்டங்கள் மற்றும் உரிமம் வழங்கும் திட்டங்கள் ஊழலுக்கான மிக பெரிய மூலங்கள் ஆகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் மற்றும் தேசிய ஊரக சுகாதார திட்டம் ஆகியவை உதாரணங்கள் ஆகும். நெடுஞ்சாலைகளில் உள்ள பல ஒழுங்குமுறை மற்றும் போலீஸ் நிறுத்தங்களுக்கு, போக்குவரத்து சார்ந்த தொழில்கள், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் இலஞ்சம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

சுவிஸ் வங்கிகளில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் இந்திய ஊழல்வாதிகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று இந்திய ஊடகங்கள் பரவலாக குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளன. எனினும் சுவிஸ் அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டுக்களை ஒரு முழுமையான கட்டுருவாக்கம் மற்றும் தவறானது என்று கூறுகிறார்கள்.

அதிக கட்டுப்பாடுகள், சிக்கலான வரிகள் மற்றும் உரிமம் அமைப்புகள், பல்வேறு அரசு துறைகள் ஒவ்வொன்றிற்கும் ஒளிபுகா அதிகாரத்துவம் மற்றும் விருப்ப அதிகாரங்கள், அரசாங்க கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு சில பொருட்கள் மற்றும் சேவைகளின் மேல் தரும் தனியுரிமை, வெளிப்படையான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் இல்லாமை ஆகியவை இந்தியாவில் ஊழலுக்கான காரணங்களில் அடங்கும். ஊழலின் அளவு மற்றும் ஊழலை குறைக்க பல்வேறு மாநில அரசின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

அரசு ஊழியர் தன் கடமையை செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ, ஒரு குறிப்பிட்ட பணியில் சாதகமாக செய்யவோ அல்லது பாதகமாக செய்யவோ சட்டப்படியாக ஊதியம் அல்லாத பணத்தையோ அல்லது பொருளையோ பெறுதல் அல்லது பெற ஒப்புக்கொள்ளுதல் ஆகியவை ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 7ன் கீழ் ஊழல் எனும் குற்றச்செயலாகும்.

ஒரு நபரோ அல்லது பல நபர்களோ, அரசு ஊழியரை ஒரு குறிப்பிட்ட கடமையை செய்ய அல்லது செய்யவிடாமல் தடுக்க, அரசு ஊழியர்க்கு கையூட்டு வழங்குவது அல்லது பெறுவது, ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 8 மற்றும் 9ன் கீழ் ஊழல் ஆகும்.

ஒரு தனிநபர் இலஞ்சம் கேட்பதற்கு உடந்தையாக இருக்கும் அரசு ஊழியர் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 10ன் கீழ் ஊழல் செய்தவர் ஆகிறார்.

அரசு ஊழியர் ஒருவர், தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தல் போன்ற குற்றங்களுக்கு ஊழல் தடுப்புச்சட்டம், 1988 பிரிவு 13ன்படி ஊழல் செய்தவர் ஆகிறார்.

No comments:

Post a Comment